
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கருப்பு, சிவப்பு நிற சுடுமண் பானை மற்றும் கூம்பு, வட்ட வடிவ அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்கப்பட்டை, சுடுமண்ணால் ஆன பொம்மைகள், புகைப்பிடிப்பான் கருவி, காதணி உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது கருப்பு, சிவப்பு நிற சுடுமண் பானை, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அலங்கரிக்கப்பட்ட கூம்பு மற்றும் வட்ட வடிவ அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு வாழ்ந்த தொன்மையான மனிதர்கள், மண்பாண்டக் கூடம் அமைத்து, கலைநயமிக்கத் தயாரித்திருக்கலாம் என தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.