தமிழ்நாடு

“அவனியாபுரம் ஜல்லிக்கட்டு”- 8ஆவது சுற்று விறுவிறு!

Published by
santhosh
Share

 

"அவனியாபுரம் ஜல்லிக்கட்டு"- 8ஆவது சுற்று விறுவிறு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8ஆவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏழு சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், 8ஆவது சுற்றில் காளைகள், காளையர்கள் களமிறங்கியுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 8ஆவது சுற்றில் ஊதா நிற உடை அணிந்து 25 வீரர்கள் களம் கண்டுள்ளனர்.

ரஜினியால் ஒரே பிரச்சனை… போயஸ் கார்டன் வீட்டு பெண் புகார்…

7ஆவது சுற்றின் முடியில் 591 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரர் கார்த்தி 16 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் வீரர் கார்த்தி 2ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவனியாபுரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் ரஞ்சித் 14 காளைகளை அடக்கி 2ஆவது இடத்தில் உள்ளார். தேனி சீலையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் முத்துக்கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி 3ஆவது இடத்தில் உள்ளார்.

அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 8ஆவது சுற்றில் வீரர்கள் குறைவாகப் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 வீரர்கள் பங்கேற்ற நிலையில், பற்றாக்குறை காரணமாக 30 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த வீரர்கள் 5 பேரும் புதியதாக 25 பேரும் சேர்த்து மொத்தம் 30 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 8ஆவது சுற்றில் பங்கேற்காத 25 பேரும், 9ஆவது சுற்றில் 30 வீரர்களுடன் சேர்த்து 55 பேராக களம் காணவுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 45 பேர் காயமடைந்துள்ளனர்; 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Show comments
Published by
santhosh
Tags: Avaniyapuram Jallikkattu Madurai