spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

அயலான் ஸ்டைலில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

-

- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு முன்னனி நடிகர்கள் நடித்துள்ள பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன. அயலான், கேப்டன் மில்லர், மிஷன் சேப்டர் 1 ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளன. இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்

நம்பி வாங்க சந்தோஷமா போங்க... ரிப்பீட்ல வாங்க... அயலான் குறித்து சிவகார்த்திகேயனின் நகைச்சுவை பேச்சு!

we-r-hiring
படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நீண்ட இடைவௌியாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் அயலான் படத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குடும்பம் குடும்பமாக சென்று அயலான் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் திருநாளுக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அயலான் பட ஸ்டைலில் ஏலியனுடன் அமர்ந்திருப்பது போல விஎஃப் தொழில்நுட்ப உதவியுடன், குடும்பத்துடன் அமர்ந்து அவர் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார்.

MUST READ