spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜாய் கிரிசில்டா மீது அவதூறு தடை கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதி மன்றம்

ஜாய் கிரிசில்டா மீது அவதூறு தடை கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதி மன்றம்

-

- Advertisement -

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக் கோரி, சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.ஜாய் கிரிசில்டா மீது அவதூறு தடை கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதி மன்றம்இந்த வழக்கில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்கத் தேவையான சட்ட அடிப்படை இல்லை எனக் கூறி மனுவை நிராகரித்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிடி மன்றத்தில் நடந்து வரும் வழக்கில், ரங்கராஜின் கோடிக்கணக்கான வியாபாரத்தை பாதிக்கும் வகையில் அவரை பற்றி அவதூறு பரப்பி யூடியூபில் பணம் சம்பாதிப்பதாக வாதிடப்பட்டது.

we-r-hiring

அதற்கு கிரிசில்டா தரப்பில் ரங்கராஜ் மீது  நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஜாய் கிரிசில்டா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில் ரங்கராஜ் டி.என்.ஏ. சோதனையில் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை நான் என தெரியவந்தால் குழந்தைக்கான முழு பொறுப்பையும் ஏற்க தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வா்…

MUST READ