இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை என்று இயக்குனர் ஆர்கே செல்வமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளாா்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை வெளியீட்டு நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடர்ந்ததுள்ளது. அதில், ‘இளையராஜா இசையமைத்த பாண்டியன், குணா, தேவர் மகன், பிரம்மா போன்ற 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் இசை வெளியீட்டு உரிமையை இளையராஜாவின் மனைவி ஜீவா நடத்திய இசை நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாகவும்,
எனவே, தங்களது அனுமதியின்றி அந்த பாடல்களை யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது இளையராஜா தரப்பில், ‘கடந்த 1997-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தபோது, யூ-டியூப், சமூக வலைதளங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் ஆடியோ ரிலீஸ் தொடர்பாக மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று தெரிவி்க்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கனவே இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆர் கே செல்வமணி வழக்கறிஞர் ஏ.சரவணனுடன் இன்று மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இளையராஜாவின் பாடல்கள் அவருக்கே சொந்தம் என்றும் இளையராஜா தனது பாடல்களின் காப்புரிமையை என்றைக்குமே தயாரிப்பாளர்களுக்கு வழங்கியது இல்லை என்றும், அவருக்கு தான் காப்பரிமை உள்ளதாக குறிப்பிட்டார்.
பட தயாரிப்பாளர்களுக்கு சம்பந்தப்பட்ட படத்தில் பயன்படுத்துவதற்கான உரிமையை மட்டுமே அளித்துள்ளார். என்றும் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கின் விசாரணையை வரும் 20ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.
அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலால் பங்குச்சந்தை 4வது நாளாக கடும் சரிவு…


