Homeசெய்திகள்தமிழ்நாடு'பெங்களூரு குண்டுவெடிப்பு'- தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவு!

‘பெங்களூரு குண்டுவெடிப்பு’- தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவு!

-

 

'பெங்களூரு குண்டுவெடிப்பு'- தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவு!

பெங்களூரு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒயிட் பீல்டு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமேஸ்வரம் கஃபேவில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 9 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த ஆறுதல் தெரிவித்த அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.

அதேபோல், கர்நாடகாவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே கிளைகளில் காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதனிடையே, வெடிகுண்டு வெடித்த இடத்தில் முகாமிட்டுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

இந்த நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சந்தேகப் பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் காவல்துறை முடிவுச் செய்துள்ளது.

MUST READ