spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

-

- Advertisement -

 

பங்காரு அடிகளார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
File Photo

பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 9வது முறையாக நீட்டிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான பங்காரு அடிகளார் நேற்று (அக்.19) மாலை காலமானார். அவரது உடலுக்கு செவ்வாடை அணிந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

“பயன்படுத்திக் கைவிடப்படும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடைச் செல்லும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

இதனைத் தொடர்ந்து, பங்காரு அடிகளாரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதைச் செலுத்தப்பட்டது.

கோயில் கருவறை புற்று மண்டபத்திற்கு அருகே அமர வைக்கப்பட்ட நிலையில், பங்காரு அடிகளார் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

MUST READ