பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் புதிய நீதி கட்சிக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்து தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் புதிய நீதி கட்சி தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கையெழுத்திட்டனர்.
டாக்டர் ஏ.சி.சண்முகம், வேலூர் மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்துப் போட்டியிட்டு வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.