
புதுச்சேரி உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமாகியவர் வைத்திலிங்கம். விடுதலைப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்; இரண்டாம் சுதந்திர போராட்டத்தில் வேட்பாளராக உள்ளார்.
வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!
புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு வெற்றி உறுதி. புதுச்சேரி மக்கள் மீது எப்போதும் எனக்கு தனி பாசம் உண்டு. புதுச்சேரி முன்னேற்றத்திற்காக நாங்கள் உழைக்கிறோம்; ஆனால் பா.ஜ.க. பின்னோக்கி இழுக்கிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யாமல், ரேஷன் அரிசியை தடை செய்தவர் துணைநிலை ஆளுநர். புதுச்சேரி அரசு நிர்வாகத்தை செயல்பட விடாமல் முன்னாள் துணைநிலை ஆளுநர் தடுத்தார்.
புதுச்சேரியில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் ஆளுநரால் பிரச்சனை தான். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி கட்சி ஆட்சி செய்தாலும் பிரச்சனை தான். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் மத்திய அரசு அலைக்கழிக்கிறது. மாநிலங்களை நகராட்சியாக நடத்துவதே பா.ஜ.க.வின் நோக்கம். கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ.க.குறைக்கவில்லை . புதுச்சேரியில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மற்றொரு ஆட்டத்தில் லக்னோvsகுஜராத் அணிகள் பலப்பரீட்சை!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்பது இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பா.ஜ.க.வின் கைக்கூலியாக செயல்படுகிறார். மதம், சாதியை வைத்து பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை செய்கிறார்; சமூகநீதி பேசவில்லை. கூட்டணி அரசு இருந்தாலும் புதுச்சேரிக்கு பா.ஜ.க. மாநில அந்தஸ்து வழங்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.