Homeசெய்திகள்தமிழ்நாடு"திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகளைக் கண்டறிக"- ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

“திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகளைக் கண்டறிக”- ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு!

-

 

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
Photo: TN Govt

தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட, செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், குவாரி குழிகள் ஆகியவற்றினைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

“அமலாக்கத்துறையினர் காவல்துறை அதிகாரிகள் கிடையாது”- உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப., “கைவிடப்பட்ட குவாரி குழிகள் போன்றவையும் மனிதர்கள், விலங்குகளுக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே, கைவிடப்பட்ட திறந்தவெளி, ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமான பள்ளங்கள், குவாரி குழிகளைக் கள ஆய்வு செய்ய வேண்டும். குவாரி குழியில் தேங்கிய நீரில் குளிப்பதால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் 3ஆம் முறையாக நீட்டிப்பு!

சாலையோர பள்ளங்கள் மற்றும் குழிகள் அருகில் வலுவான பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும். சாலையோரக் குழிகள், பள்ளங்கள் அருகே எச்சரிக்கை பலகை, எதிரொலிப்பான்களை அமைக்க வேண்டும். இது தொடர்பாக, கள ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ