spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!

பாட்டிலில் பால் விற்பனை- கைவிரித்த ஆவின்!

-

- Advertisement -

 

சென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!
File Photo

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகர்வோர் விரும்பவில்லை என்று ஆவின் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

we-r-hiring

“அவளுடன் நானும் இறந்துவிட்டேன்”- இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உருக்கம்!

ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதில், கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய முடியுமா என்று ஆய்வு நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீத் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், பாலீதின் பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்வதையே நுகர்வோர்கள் விரும்புகின்றனர். மேலும், நுகர்வோர் விருப்பத்தின் அடிப்படையில், ஆய்வுச் செய்து நீதிமன்றம் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் எனவும் ஆவின் நிறுவனம் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை அறிவிப்பு!

இதனையடுத்து, வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

MUST READ