
2022- 23 ஆம் நிதியாண்டில் வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக, மொத்தம் 560 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022- 2023 ஆம் நிதியாண்டில் சம்பா சாகுபடியாக 46 லட்சம் டன் உற்பத்திச் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மிதமான வறட்சிக் காரணமாக, 33%- க்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு 181 கோடியே 40 லட்சம் ரூபாய் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட்டுளளதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
காவிரி ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!
தற்போது பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வறட்சி, வெள்ளம், பருவம் தவறிய மழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி, இழப்பீட்டுத் தொகையாக மொத்தம் 560 கோடி ரூபாய் பாதிக்கப்பட்ட ஆறு லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


