
காவிரி விவகாரத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளில் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உத்தரவுகளை சம்மந்தப்பட்ட இரண்டு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்னை இல்லை- அண்ணாமலை
காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடகா அரசு தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது. தமிழகத்திற்கு குறைந்த அளவே தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட போதும், அதைக் கூட தருவதற்கு கர்நாடகா அரசு மறுத்து வருவதாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடினார்.
கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்திற்கு 2,500 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்க முடியும் என்று வாதிட்டார். விவசாயத் தேவைக்காக தமிழகம் காவிரி நீரைக் கேட்பதாகவும், ஆனால் குடிநீருக்கே வழியில்லாத நிலை கர்நாடகாவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மழை இல்லாத காலங்களில் ஆறு தொடங்கும் இடத்தில் தானே வறட்சி அதிகம் இருக்கும் என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூ
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், காவிரி ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரை மற்றும் உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட இடைக்கால மனுக்கள் மீது தலையிட மறுப்பு தெரிவித்தனர்.