
திருவாரூரில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 25) காலை 08.00 மணிக்கு தொடங்கி வைத்தார்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறும் முதல் தெலுங்கு நடிகர்….நெகிழ்ச்சியில் அல்லு அர்ஜுன்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுப் பரிமாறியும், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து பேசியவாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுச் சாப்பிட்டார்.
அப்போது, என்னை தெரியுமா? என் பெயர் தெரியுமா? என மாணவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தில் 31,008 அரசுப் பள்ளியில் சுமார் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். தமிழகம் முழுவதும் அனைத்து அரசுத் தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழா அப்டேட்!
தமிழகத்தில் கடந்த 2022- ஆம் ஆண்டு செப்டம்பர் 15- ஆம் தேதி காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது; முதற்கட்டமாக, 1,500 அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.