- Advertisement -
நாம் தமிழர் கட்சியின் செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு
நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது கோவை உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவை உக்கடம் பகுதியில் கடந்த டிச.6 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசரை செயலாளர் இடும்பாவனம் கார்த்திக், தேசிய ஒறுமைபாட்டிற்கு குந்தகம் விளைவிற்கும் விதமாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக உதவி ஆய்வாளர் ரேனுகா தேவி புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் இடும்பாவனம் கார்த்திக் மீது உக்கடம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.