Homeசெய்திகள்தமிழ்நாடுஅன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

-

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்களை இராட்சத எந்திரங்களைக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி நிறுவனமும் அழித்தன. சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என என்.எல்.சி. நிர்வாகம் அறிவித்துள்ளது.

Image

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாமக தலைவர் அன்புமணி தலைமையில் நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது, தடையை மீறி என்.எல்.சிக்கு உள்ளே நுழைய முயன்றதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விடுவிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ