எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ஈ.பி.எஸ். சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து ஓபிஎஸ்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என ஈபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.