Homeசெய்திகள்தமிழ்நாடு"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

-

 

"எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்பு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Live Image

சென்னையில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், “நாங்கள் ஆட்சியை நம்பி அல்ல; ஜனநாயகத்தை நம்பியுள்ளோம் எனக் கூறியவர் கலைஞர். உயிரே போனாலும் எமெர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என கலைஞர் கருணாநிதி கூறினார். ஜனநாயகத்திற்காக எமெர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது தி.மு.க.

அடுத்த மாதம் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்கக் கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஆட்சிக் கலைக்கப்படும் என்ற மிரட்டல்களுக்கு அடிபணியாமல் எதிர்த்தவர் கலைஞர். நாட்டில் ஜனநாயகத்தின் பாதுகாப்பு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டில் தற்போது ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற சூழல் அமைந்துள்ளது.

சிறையில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு உற்சாக வரவேற்பு!

எதிர்க்கட்சிகளை மிரட்டுவது, எதிர்க்கருத்து கூறுவோரை அச்சுறுத்தும் பணியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செல்போனை ஒட்டுக் கேட்கும் வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஐந்து மாநிலங்கள் உட்பட வரவிருக்கும் அனைத்துத் தேர்தல்களிலும் பா.ஜ.க. தோல்வியடையும் என தகவல் வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ