Homeசெய்திகள்தமிழ்நாடுசந்திராயன்3  ரீ -கிரியேட் செய்த பள்ளி மாணவர்கள்: ISRO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் !!!

சந்திராயன்3  ரீ -கிரியேட் செய்த பள்ளி மாணவர்கள்: ISRO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் !!!

-

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சந்திராயன்-3  திட்டத்தை  ரீ -கிரியேட் செய்து அசத்திய மானவர்கள் பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது..

சந்திராயன்3  ரீ -கிரியேட் செய்த பள்ளி மாணவர்கள்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் நீலன் மெட்ரிக் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 1,480 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 24 ஆம் தேதி உலகமே வியந்து பார்த்த இந்திய விஞ்ஞானிகளின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் தத்ரூபமாக சந்திராயன் 3 நிலவில் இறங்குவது போன்ற வடிவமைப்பை செய்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன்3  ரீ -கிரியேட் செய்த பள்ளி மாணவர்கள்:

இந்நிகழ்ச்சி இணையத்தளத்தில் வைரலாகி பொதுமக்கள், சமுக ஆர்வலர்கள் ,மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதில் பள்ளி தாளாளர் நீலன் அசோகன், செயலாளர் சுரேன் அசோகன் ஆகியோர் முன்னிலையில் பள்ளி முதல்வர் சந்தன லட்சுமி ,ஒருங்கிணைப்பாளர் அம்பிகா வடிவழகி ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியுள்ளனர்.

MUST READ