Homeசெய்திகள்தமிழ்நாடுகுழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் - காவல்துறை எச்சரிக்கை

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல் – காவல்துறை எச்சரிக்கை

-

குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பொய்யான காணொலிகள் பரவி வருகிறது. இது போன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க ஒரு சிலர் வேண்டுமென்ற தவறான எண்ணத்துடனும் சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக போலியான செய்திகளை, செய்திகளை பார்த்தோ, கேட்டோ பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சந்தேகத்திற்கு சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும், பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெருநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ