
கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக அளவில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், காலை 10.00 மணி வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை!
இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழையுடன், அதிக அளவில் இடி, மின்னலுக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று (டிச.04) காலை 10.00 மணி வரை மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.