
சென்னை மண்டலத்தைச் சேர்ந்த சார்பதிவாளர் 78 பேர் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு பின் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!
தமிழகத்தில் உள்ள மாவட்ட பதிவாளர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடுகள் நடத்தப்பதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் மீதான புகார்களுக்கு அவ்வப்போது நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இந்த நிலையில், நிர்வாக காரணங்கள் என்ற அடிப்படையில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 78 சார் பதிவாளர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
“புண்ணிய தலங்களைத் தரிசிக்க பாரத் கௌரவ் சிறப்பு ரயில்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சென்னை மண்டலத்தில் தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பதிவு அலுவலகங்களில் இருந்த 55 சார் பதிவாளர்கள் வெளியூர்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல், வெளியூர்களில் இருந்து 23 பேர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாகப் பணியில் சேர வேண்டும் எனவும் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.