Homeசெய்திகள்தமிழ்நாடுகிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை

கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை

-

கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை

சென்னையில் ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வாங்க ஆளில்லை... இந்த மாதம் கிடுகிடுவென உயர்ந்த பிராய்லர் கோழி  விலை...!
தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி, இதர பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளில் இருந்தும் சென்னைக்கு கோழிகள் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வெயிலின் தாக்கத்தினால் கோழிகளின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் வெயில் தாக்கத்தினால் கோழிகள் இறப்பதாலும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் அதிக அளவில் கோழிகள் இறப்பதாலும் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை

கடந்த வாரம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பிராய்லர் சிக்கன் கடந்த ஒரு வார காலமாக விலையேற்றம். நேற்று இன்றும் 330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று நாட்டுக்கோழி ஒரு கிலோ 400 முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் சிக்கனை நாடிச் செல்வதால் சிக்கன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

 

MUST READ