தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் வி ருந்தளிப்பது வழக்கம். அதன்படி, இன்று மாலை ஆளுநர்
மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த தேநீர் விருந்தில் ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவை தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன. அதேவேளையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெ ஞ்சமின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்கும் வகையி ல் தமிழக அரசுத் தரப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர்களும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.