spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

-

- Advertisement -

நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மே 10 ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

we-r-hiring

நாளை 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 08 ஆம் தேதி வரை நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

அரசு தேர்வுகள் இயக்ககத்தில் ( சென்னை டி.பி.ஐ வளாகம் ) காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் மதிப்பெண் விவரம் அவர்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

MUST READ