Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை: தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி...

சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை: தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூரில் போதைப் பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பன்னிரண்டாம் வகுப்பு (12th) மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசை கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் அடித்துக் கொலை: தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!

அடுத்தடுத்த கொடூரங்கள்: உதயநிதி கண்டனம்
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போதைக் கும்பலின் அராஜகத்தைத் தட்டிக்கேட்ட காரணத்திற்காகக் கோவை கல்லூரி மாணவர் அமுதன் படுகொலை செய்யப்பட்ட சுவடு மாறுவதற்குள், அடுத்த சில தினங்களிலேயே தலைநகர் சென்னையில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் தனுஷ் 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

we-r-hiring

“சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது”
தொடர்ந்து பேசிய அவர், “பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தவெக அரசு முற்றிலும் தோற்றுவிட்டது என்பதற்குத் மாநிலத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய படுகொலைகளே சாட்சியாகும்” எனக் குற்றம்சாட்டினார். மேலும், மாணவர் தனுஷ் படுகொலையில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!

MUST READ