spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

-

- Advertisement -

வையம்பட்டி அருகே குளத்தில் மூழ்கி 7 ஆம் வகுப்பு மாணவி பலியானார் .மேலும் இரண்டு பேரை காப்பாற்றிய சிறுவனை கிராம மக்கள் பாராட்டினர்.

குளத்தில் மூழ்கி 7ஆம் வகுப்பு மாணவி பலி :

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி .இவரது மகள் விஸ்வஜோதி (12). 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் உள்ள முத்தாலம்மன் குளத்தில் குளிப்பதற்காக விஸ்வஜோதி தனது சகோதரி தேவவர்ஷினி, ரவி பிரகாஷ் ஆகியோருடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் விஸ்வஜோதி ,தேவதர்ஷினி ,ரவி பிரகாஷ் ஆகியோர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் சபரீஸ்வரன்(13) என்ற சிறுவன் தேவதர்ஷினி, ரவி பிரகாஷை குளத்தில் இருந்து வெளியே இழுத்து காப்பாற்றினார் . ஆனால் சிறுமி விஸ்வஜோதி தண்ணீரில் மூழ்கினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளத்தி மூழ்கிய விஸ்வஜோதியை மீது மேலே கொண்டு வந்தனர்.சிறுமி தண்ணீரில் மூழ்கியது அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய (13) வயது சிறுவனை பொதுமக்கள் பாராட்டினர்.

MUST READ