சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச் 17) மாலை 05.00 மணிக்கு இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சமாஜ் வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சரை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று (மார்ச் 17) மாலையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு திரும்புகிறார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு கூடும் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.