நெல்லையில் சுங்கக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை சாலைக்குள் அனுமதிக்க சுங்கச்சாவடி ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு – முதலமைச்சர்
வள்ளியூர் பேருந்து பணிமனை முன்பு திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்தில் ஒரு பயணி மட்டுமே பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அரசுப் பேருந்து நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு வந்த நிலையில், ‘FASTag’- க்கில் போதுமான பணம் இல்லாததால் சுங்கச்சாவடி வழியாகப் பேருந்தை அனுமதிக்க ஊழியர்கள் மறுத்தனர்.
இதனால் வேறு வழியின்றி பேருந்து ஓட்டுநர், பேருந்தை எதிர்திசையில் திருப்பி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மாற்று பாதையில் திருநெல்வேலிக்கு இயக்கியுள்ளார். இதுபோன்று, பல அரசுப் பேருந்துகளில் சரிவர சுங்கச்சாவடி கட்டணம் கட்டப்படாததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் கண்டிப்புடன் நடந்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
மாநிலக்கல்வியைக் காவிமயமாக்குவதுதான் திராவிட மாடலா? – சீமான் அரசுக்கு கேள்வி
இது வள்ளியூர் பேருந்து பணிமனை மேலாளர் கூறுகையில், வழக்கமான இயக்கப்படும் பேருந்தில் பழுது காரணமாக, மாற்றுப் பேருந்து இயக்கப்பட்டது. மாற்றுப் பேருந்து என்பதால் மாதம் ஒருமுறை செலுத்தும் சுங்கக்கட்டணம் செலுத்தப்படவில்லை எனவும், இதுபோன்ற கவனக்குறைவுகள் வரும் நாட்களில் ஏற்படாது என்றார்.