spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஸ்பெயின் செல்கிறார்!

-

- Advertisement -

 

"விண்ணப்பங்களைப் பெற ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்"- மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தல்!
File Photo

தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.27) இரவு 09.45 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானம் மூலம் துபாய் வழியாக ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டிற்கு செல்கிறார்.

we-r-hiring

ஜெய்ஷ்வால் அபார ஆட்டம் – வலுவான நிலையில் இந்தியா!

முதலமைச்சருடன் தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறைச் செயலாளர், தமிழ்நாடு அரசின் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயலாளர் உள்ளிட்டோரும் ஸ்பெயின் செல்கின்றனர். சுமார் 11 நாட்கள் ஸ்பெயினில் தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

அத்துடன், ஸ்பெயின் நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களுக்கு சென்று பார்வையிடும் முதலமைச்சர், நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வரும் பிப்ரவரி 08- ஆம் தேதி சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்த இந்திய அணி வீரர்கள்!

முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

MUST READ