இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
அந்த கடிதத்தில், “இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் இந்திய மீனவர்களின் உரிமைகளைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். இலங்கை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அதிபரிடம் வலியறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது, படகு பறிமுதல் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும். இந்திய மீனவர்களின் படகுகளை நாட்டுடைமையாக்குவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“மணிப்பூர் கலவரம் மனித குலத்திற்கு எதிரானது”- அன்புமணி ராமதாஸ் ட்வீட்!
இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன், இலங்கை தமிழர் பிரச்சனை, பொருளாதாரம், கடனுதவி உள்ளிட்டவைக் குறித்து ஆலோசிக்கவுள்ளார். இதில் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.