Homeசெய்திகள்தமிழ்நாடுகாப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை - ஐகோர்ட் கருத்து

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை – ஐகோர்ட் கருத்து

-

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை – ஐகோர்ட் கருத்து

காப்பீட்டு தொகை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றனர். காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை - ஐகோர்ட் கருத்து

மாரடைப்பால் உயிரிழந்தவரின் காப்பீட்டு தொகையை வழங்க மறுத்த தனியார் (ஐ.சி.ஐ.சி.ஐ) வங்கியின் உத்தரவை ரத்து செய்து 4 வாரங்களில் காப்பீட்டு தொகையை அவரது மனைவிக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி மாரடைப்பால் கணவர் உயிரிழந்ததை அடுத்து, காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி மனைவி லட்சுமி விண்ணப்பித்துள்ளார்.

காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை - ஐகோர்ட் கருத்து

மரணத்துக்கான காரணம் தெரிவிக்கவில்லை. காப்பீட்டில் மாரடைப்பு வராது என்ற காரணங்களைக் கூறி வங்கி கோரிக்கையை  நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

கொரோனா காலத்தில் மரணமடைந்ததால் பிரேத பரிசோதனை செய்யவில்லை. திருவேற்காடு நகராட்சி அளித்த சான்றிதழில் மாரடைப்பால் மரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து காப்பீடு நிபந்தனைகள் பற்றி தனி நபர்களுக்கு சட்ட அறிவு இருக்காது. இதை பயன்படுத்தி, காப்பீட்டுத் தொகையை வழங்குவதை வேண்டுமென்றே புறக்கணித்து விடுகின்றன என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

MUST READ