Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் இதுதான்!

-

 

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் – தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 9.3.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பின்வரும் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (18.3.2024) தீர்மானிக்கப்பட்டது. தொகுதிகளின் விவரம், 1. திருவள்ளூர் (தனி), 2. கடலூர், 3. மயிலாடுதுறை, 4. சிவகங்கை, 5. திருநெல்வேலி, 6. கிருஷ்ணகிரி, 7. கரூர், 8. விருதுநகர், 9. கன்னியாகுமரி, 10. புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

MUST READ