தமிழகத்தில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது
அந்த கடிதத்தில், “பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட பாதிப்பை நீக்க நடவடிக்கை தேவை; இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். நூற்பாலைத் துறையில் மீண்டும் வேலை வாய்ப்பைக் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நூற்பாலை சங்கம் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்கும் அளவுக்கு விலை உயர்வு கடும் நெருக்கடியை அளித்துள்ளது. அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தில் நிதியுதவியை நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டும்.
நூற்பாலை நிறுவனம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க வேண்டும். பருத்தி மீதான 11% இறக்குமதி வரியைத் திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
கோவை மாவட்டத்தில் உள்ள சுமார் 100- க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சரின் கடிதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.