தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரும் 16-ஆம் தேதி சாரல் விழா தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் சீஸன் காலத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் விழா நடத்தப்படுது வழக்கம். சாரல் விழாவுடன் உணவுத் திருவிழா, புத்தகத் திருவிழா மற்றும் தோட்டக்கலை திருவிழாவும் நடப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டிற்கான சாரல் விழா குற்றாலத்தில் வரும் 16-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். 4 நாட்கள் நடைபெறும் இந்த சாரல் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கா.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சாரல் விழாவின் தொடக்க நாளில் ◌ெகொழு கொழு குழந்தைகள் போட்டி, கலை நிகழ்ச்சிகளும், 17-ம் தேதி படகு போட்டி, நாய்கள் கண்காட்சியும் நடைபெறுகிறது. 18-ம் தேதி பளு தூக்குதல், ஆணழகன் போட்டியும், இறுதி நாளில் சிறுதானிய உணவு போட்டி நடைபெறுகிறது. மேலும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஐந்தருவி அருகேயுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.