spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பட்டாசு ஆலையில் வெடி விபத்து"- நடந்தது என்ன?

“பட்டாசு ஆலையில் வெடி விபத்து”- நடந்தது என்ன?

-

- Advertisement -

 

"பட்டாசு அலையில் வெடி விபத்து"- நடந்தது என்ன?

we-r-hiring

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் வழக்கம் போல் அறையில் வெடிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 4 கட்டடங்களும் தரைமட்டமாகின.

565 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார் நாசர்!

வெடி விபத்தி 5 பெண்கள், 4 ஆண்கள் என மொத்தம் 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

அதைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஆலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி, அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதை விழிப்புணர்வு குறித்து பெண் காவலர் பாடிய பாடல் வைரல்!

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சுமார் 30- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையில் பணிபுரிந்து வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ