Homeசெய்திகள்தமிழ்நாடுசுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!

சுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!

-

 

சுங்கத்துறைத் தேர்வில் ஆள்மாறாட்டம்- வடமாநில இளைஞர் கைது!
File Photo

சென்னை பாரிமுனையில் சுங்கத்துறை ஓட்டுநர், கேண்டீன் அட்டெண்டெர் ஆகிய பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1,600 பேர் இந்த தேர்வில் பங்கேற்றனர். அப்போது, தேர்வு எழுதுபவர்களில் வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகளில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

செங்கம் அருகே சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!

அவர்களை சோதனையிட்ட போது, 28 பேர் ப்ளூத்தூத்தின் உதவியுடன் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் கேள்விகளை சொல்ல, வெளியில் இருந்து ஒருவர் அதற்கான பதிலைத் தெரிவித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர், அவர்களை காவல்துறையினர் கைது செய்த நிலையில், 28 பேரும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்ட இரண்டாவது நாளே ரத்து!

அவர்கள் 28 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், இனி அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியாத வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷாவன்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவருக்கு பதிலாக, தேர்வு எழுதியது அம்பலமான நிலையில், ஷாவன்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ