spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் - ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

-

- Advertisement -

மதுரை ரயில் தீ விபத்துக்கு சிலிண்டரே காரணம் – ரயில்வே பாதுகாப்பு ஆணையர்

ரயிலில் தீ விபத்து நடந்ததற்கு கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவே காரணம் என தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி பேட்டியளித்துள்ளார்.

Madurai train accident

மதுரையில் கடந்த சனியன்று சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி இரண்டாவது நாளாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் ரயில்வே அதிகாரிகள், தப்பியோடிய சமையல் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசார், தீயணைப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.

we-r-hiring

பின்னர், விசாரணை முடிவுகள் குறித்து ரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி அளித்த பேட்டியில், “இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் காலியான சிலிண்டரை மீண்டும் நிரப்பி உள்ளனர். சிலிண்டர் தான் விபத்திற்கான பிரதான காரணம். கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு அதனால் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் சிலிண்டர் வெடித்துள்ளது. லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

MUST READ