- Advertisement -
மது போதையில் சிகிச்சை அளித்த பல் மருத்துவர்- மருத்துவமனைக்கு சீல்
கடையத்தில் மது போதையில் சிகிச்சை அளித்த பல் மருத்துவரிடம் விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் கடையத்தில் ராமதங்கராஜன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரிடம் சிகிச்சை பெற செல்வன் என்பவர் சென்ற போது மருத்துவர் ராமதங்க ராஜன் மது போதையில் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் மது அருந்திவிட்டு சிகிச்சை அளித்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் தென்காசி கேட்டாசியர் லாவண்யா தலைமையில் வருவாய் மற்றும் சுகாதார துறையினர் கடையத்தில் செயலபட்டு வந்த அந்த பல் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். மது போதையில் இருந்த பல் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.