தந்தை இறந்த நிலையிலும் 12ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 474/600 மதிபெண்கள் எடுத்தார்.
கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியை சேர்ந்தவர் ரத்தின வடிவேல். ஓய்வு பெற்ற சர்வேயரான இவருக்கு மார்ச் 15 தேதி அதிகாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த ரத்தின வடிவேல் மகள் ராஜேஸ்வரி கடலூர் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
அன்று 12ம் வகுப்பு இயற்பியல் பொது தேர்வு நடைபெற்றது. தந்தை இறந்ததால் மிகவும் துயரம் அடைந்த மாணவி கதறி அழுதார். இருப்பினும் அன்று காலை இயற்பியல் தேர்வு எழுதினார்.
தேர்வு எழுத வந்த மாணவியை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் அவருக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரி தேர்வு அறைக்கு சென்று தேர்வு எழுதினார்.
தந்தை ரத்தின வடிவேல் இறந்த நாளன்று எழுதிய இயற்பியல் தேர்வில் ராஜேஸ்வரி 70/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ் 2 பொது தேர்வில் 474/600 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.