Homeசெய்திகள்தமிழ்நாடுதீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

 

தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Photo: CMO

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

அதைத் தொடர்ந்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கணபதி, பிரபாகர ராஜா, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ரங்கநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி- டிடிவி தினகரன்

இதனிடையே, தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை! அவர் நெஞ்சில் சுமந்ததோ அடக்குமுறைக்கு எதிரான எரிமலை!

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தமிழ் மண்ணில் விடுதலைக் கனலை மூட்டிய ஓடாநிலைக் கோட்டையின் ஓங்குயர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ