Homeசெய்திகள்தமிழ்நாடுமழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

-

மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் நீர்வள ஆதாரத் துறையின் பணிகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Image

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர், குன்றத்தூர் பிரதான சாலையில் உள்ள போரூர் டேங்க்கில் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் புதிய ​மதகு​ அமைத்தல் மற்றும்​ போரூர் ஏரி முதல் இராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, அசோக் நகர் மண்டலத்தில் மழை நீர் வடிகால் பணிகள் சுமார் 39 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அசோக் நகர் 4வது அவென்யூவில், 7.60கோடி மதிப்பில், 923மீட்டர் தூரத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மற்றும் 22 ஆம் ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக அசோக் நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. அசோக் நகர் நான்காவது அவென்யூவில் ஜூலை 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் இப்பணி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Image

இதனிடையே, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் புகார்கள் பெறுவது மற்றும் ஆவணங்கள் பராமரிப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

MUST READ