
வளர்ச்சித் திட்டப் பணிகளைக் கண்காணிக்க 12 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து
அதன்படி, அரியலூர் மாவட்டத்திற்கு அருண் ராய் ஐ.ஏ.எஸ்., கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ். கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு டாக்டர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்.,நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரமேஷ் சந்த் மீனா ஐ.ஏ.எஸ்., நாமக்கல் மாவட்டத்திற்கு குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்., புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாகராஜன் ஐ.ஏ.எஸ்., ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நந்தகுமார் ஐ.ஏ.எஸ்., ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்., சேலம் மாவட்டத்திற்கு சங்கர் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., திருப்பூர் மாவட்டத்திற்கு விஜயகுமார் ஐ.ஏ.எஸ். ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
தமிழகத்தில் 25 மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.