தி.மு.க.விடம் 3 தொகுதிகளைக் கேட்டிருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மது போதையில் தாயை கழுத்து அறுத்து கொல்ல முயன்ற மகன்!
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன், “தி.மு.க.வுடன் அடுத்த ஓரிரு நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் தேவை இருந்தால் சந்திப்போம்.
இரண்டு தனித் தொகுதிகள் மற்றும் ஒரு பொதுத் தொகுதி என மூன்று தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டிருக்கிறோம். முதலில் நான்கு தொகுதிகளைக் கேட்ட நிலையில் பின்னர் மூன்று தொகுதிகளைக் கேட்டிருக்கிறோம். கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க. எந்தவித அவசரமும் காட்டவில்லை. உயர்நிலைக் குழு கூட்டம் உரிய நேரத்தில் நிறைவடையாததால் இன்று பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை.
குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!
தி.மு.க. கூட்டணியில் தான் இருக்கிறோம்; அவர்களுடன் தான் இந்த தேர்தலைச் சந்திக்கிறோம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியில் தான் இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் இல்லை. தி.மு.க. அளிக்கும் தொகுதிகளில் எங்களுடைய சின்னத்தில் தான் போட்டியிடுவோம். தி.மு.க.வுடன் தான் கூட்டணில் அதில் எந்த குழப்பமும் இல்லை.
நாங்கள் விரும்பும் தொகுதிகளை தி.மு.க.விடம் திரும்ப திரும்பக் கேட்போம். தி.மு.க.- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடையே பரஸ்பர புரிதலில் ஒப்பந்தம் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.