Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக - அதிமுக கூட்டு சதி!" – அமைச்சர் நிர்மல்குமார்...

தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக – அதிமுக கூட்டு சதி!” – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி!

-

- Advertisement -

“தமிழகத்தில் மின்வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. அதேநேரம், தமிழகத்தில் தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக மற்றும் அதிமுகவினர் இணைந்து சதி செய்து வருகின்றனர்” என்று அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக - அதிமுக கூட்டு சதி!" – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி!

​மின் விநியோகம், அனல் மின் நிலையப் பணிகள், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கல்விக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோரிக்கைகள் குறித்து அவர் அளித்த விரிவான பேட்டியின் விவரம்,

we-r-hiring

​மின்தடைக்கான காரணங்கள் & மின்வாரிய விளக்கம்
​கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மின்தடை குறித்து அமைச்சர் நிர்மல் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஒரு வாரமாகப் பகல் நேர வெப்பம் மிகக் கடுமையாக அதிகரித்துள்ளதால், மாநிலத்தின் மின் தேவை பெருமளவு உயர்ந்துள்ளது. இதுவே தற்காலிக மின்தடைக்கு முக்கியக் காரணம். மின் கேபிள்கள் சில இடங்களில் ஒப்பந்ததாரர்களால் திட்டமிட்டுத் துண்டிக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் ஒருசில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. “தமிழக மின்வாரியம் ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. சோலார் மின்நிலையம் அமைக்க ஒரு மெகாவாட்டுக்கு 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக முந்தைய திமுக ஆட்சி மீது என்னிடம் புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்துத் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் சோலார் நிலையங்களுக்கான அனுமதி வழங்கப்படும்” என்றார். எண்ணூர் மற்றும் வடசென்னை அனல் மின் நிலையங்களால் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும், உப்பூர் அனல் மின் நிலையத்தை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக - அதிமுக கூட்டு சதி!" – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி!

​”தவெக-வில் இணைவது குதிரை பேரம் அல்ல” – அரசியல் விமர்சனம்
​திமுக மற்றும் அதிமுக கட்சிகள் குறித்துப் பேசிய அமைச்சர், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் மாற்றுக்கட்சியினர் இணைவது குறித்துப் பின்வருமாறு விளக்கமளித்தார், ​”திமுக – அதிமுக கூட்டணி ஒருங்கிணைப்பாளர்களாக கே.டி.ராஜேந்திர பாலாஜியும், அனிதா ராதாகிருஷ்ணனும் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது போலத் தெரிகிறது. இப்போது வரை தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கவே இவ்விரு கட்சிகளும் இணைந்து முயற்சித்து வருகின்றன. இந்த திமுக-அதிமுக கூட்டு ஆட்சியை விரும்பாமல்தான், தங்களின் சொந்தத் தலைமை மீது நம்பிக்கை இழந்து அதிமுகவினர் தவெக-வில் இணைகின்றனர். இதை ‘குதிரை பேரம்’ எனக் கூறக் கூடாது. ​உண்மையாகவே குதிரை பேரத்தில் ஈடுபடுவது செந்தில்பாலாஜி தான். இதுகூடத் தெரியாமல் திமுகவின் ஆர்.எஸ். பாரதி டைம் பாசுக்காக சிபிஐ-க்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். இதில் சிபிஐ எப்படி விசாரணை நடத்த முடியும்? அதிமுகவினர் தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் இருப்பதையே மறந்துவிட்டு, என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் ஸ்டாலின் மற்றும் மோடி குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

​துணைவேந்தர் நியமனத்தில் புதிய சட்டத்திருத்தம்
​தமிழகப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் நிலவும் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார், ​தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யும் குழுவில், இனி பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) உறுப்பினரையும் சேர்த்து மொத்தம் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். ​இதற்கான அதிகாரப்பூர்வ சட்டத்திருத்தம் வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்படும்.தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க திமுக - அதிமுக கூட்டு சதி!" – அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி!

​கொள்கை முடிவுகள் மற்றும் இதர விவரங்கள்
​இருமொழிக் கொள்கை:
“தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் இருமொழிக் கொள்கை மாறாது; அதுவே தொடரும். ஆளுநர் குலக்கல்வி குறித்துப் பேசுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால், தமிழக அரசின் கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது” என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

​அருண் ஐபிஎஸ் மாற்றம்: சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் துறை மாற்றம் செய்யப்பட்ட முடிவு, முழுமையாக முதலமைச்சர் அலுவலகத்தால் (CMO) எடுக்கப்பட்ட முடிவு.

அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே 80 சதவீத நியமனப் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுவிட்டன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.

என்ன சார் இப்படி பேசிட்டீங்க? அரசுப் பள்ளியைக் கலாய்த்துவிட்டு.. அதே பள்ளியைக் கொண்டாடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!​

MUST READ