Homeசெய்திகள்தமிழ்நாடு"தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்" - மு.வீரபாண்டியன் அதிரடி!

“தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட்டுகள் தனித்துப் போட்டியிடுவோம்” – மு.வீரபாண்டியன் அதிரடி!

-

- Advertisement -

தேர்தல் நேரத்துச் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடவும் தயாராக இருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மு.வீரபாண்டியன்

we-r-hiring

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் சூழல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் எதிர்காலத் திட்டம் குறித்துப் பகிர்ந்து கொண்டார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதன் முக்கிய விவரங்கள்:

இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழு தேர்தலுக்கானது அல்ல:

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து தற்போது ஒரு இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். இந்தக் குழு தேர்தல் கூட்டணி கிடையாது. தமிழகத்தின் நலன்களுக்காகப் போராடுவதற்காகவும், நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடும் மட்டுமே இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் தனித்துப் போட்டி:

உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்பவே தேர்தல் முடிவுகள் எடுக்கப்படும். ஒருவேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவானால், கம்யூனிஸ்டுகளால் தனித்து களம் காண முடியும். கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் வலுவான கட்டமைப்பு இருக்கிறது, எங்களின் மக்கள் பணியை மக்கள் அறிவார்கள். எனவே, அத்தகைய சூழல் ஏற்பட்டால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம். அதனை கட்சியே கூடி முடிவு செய்யும்.

அரசியல் குதிரை பேரத்திற்கு கண்டனம்:

தற்போது நடக்கும் கட்சித் தாவல் மற்றும் குதிரை பேர அரசியல் முற்றிலும் ஏற்புடையதல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், பல கட்சிகள் இயங்கும் முறையையும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கும். மேலும், மக்கள் மத்தியில் அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை இது உருவாக்கும். அவரவர் கொள்கை வழியில் நின்று நேர்மையாக அரசியல் செய்வதே கடமை என்று நாங்கள் கருதுகிறோம் என மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

MUST READ