spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்'- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’- தி.மு.க. தலைமை அறிவிப்பு!

-

- Advertisement -

 

தி.மு.க.வில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கம்!
Photo: DMK

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்திட தி.மு.க. தலைமை உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 8.25% ஆக உயர்வு!

தி.மு.க. தலைமை இன்று (பிப்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க. அரசின் பத்தாண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், துன்பங்களை நேரடியாகக் கேட்டறிந்திட கழக முன்னணியினர் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரையில் பங்கேற்று அ.தி.மு.க.வை மக்கள் நிராகரிப்பதற்கான அடித்தளமிட்டனர்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் 2024- ல் கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், மத்திய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அ.தி.மு.க.வின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, தி.மு.க. முன்னணியினர் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியான கூட்டங்களில் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் குரலாக பிப்ரவரி 16,17 மற்றும் 18 ஆகிய நாட்களில் கீழ்கண்டவாறு நடைபெறும் பரப்புரைக் கூட்டங்களை பொறுப்பு அமைச்சர்களுடன் இணைந்து, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், கிளைச்செயலாளர்கள், பூத் கமிட்டியினர் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்ட கூட்டங்களாக நடத்திட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதோடு, எந்தெந்த மாவட்டங்களில் யார் யார் கூட்டங்களில் பங்கேற்று பேசுவார்கள் என்பது குறித்த பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.

MUST READ