இலங்கையில் உள்ள கால்நடை பண்ணைகளில் இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு குத்தகை விடும் முயற்சிக்கு பால் உற்பத்தி நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொது கழிப்பறையில் 2 வருடங்களாக வசித்து வரும் குடும்பம் – தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை
இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த பிப்ரவரி 08- ஆம் தேதி இலங்கையில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வுச் செய்யும் பணியை முன்னெடுத்துள்ளதாக தேசிய பண்ணை விலங்குகள் மேம்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் தேசிய பண்ணை விலங்குகள் மேம்பாட்டு சபையின் கீழ் உள்ள 31 விவசாய நிலப்பகுதிகள் 28,000 ஏக்கர்களைக் கொண்டதாகும். இந்தியா – இலங்கை இடையே அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, தேசிய பண்ணை விலங்குகள் மேம்பாட்டு சபைக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அமுல் பால் உற்பத்தி நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளன.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தா அமரவீர, இந்தியாவில் இருந்து பால் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், 15,000 மில்லியன் டாலர்கள் அளவுக்கு இலங்கையில் அமுல் முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார். ஐலாண்ட், மில்கோ நிறுவனங்களின் பணிகள் மாற்றப்படாது என்றும், இலங்கை பால் உற்பத்தி நிறுவன ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் மஹிந்தா அமரவீர தெரிவித்துள்ளார்.
‘MY V3 ADS’ நிறுவனர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
இந்த நிலையில், இந்தியாவின் அமுல் நிறுவனத்திற்கு கால்நடைப் பண்ணைகளைக் குத்தகைக்கு விடும் முயற்சிக்கு இலங்கையின் பால் உற்பத்தி நிறுவனமான மில்க்கோ நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.