spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்..!!

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்..!!

-

- Advertisement -

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம்
திமுக உயர்நிலை செயல் திட்ட ஆலோசனை கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

சட்டப்பேரவை தேர்தல் பணிகளை திமுக தொடங்கிவிட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் விரைவில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்தக்கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

we-r-hiring

அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

▪️மகளிருக்கு கட்டண்மில்லா பேருந்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வம், மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திமுக - அண்ணா அறிவாலயம்

▪️ தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் புறந்தள்ளி ஹிந்திக்கு விழா எடுப்பது, சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள் கொண்டு வருவது, தொடர் ரயில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்காததது, மாநில அரசுக்கான நிதியை விடுவிக்காதது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

▪️தமிழக மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல், அதிகளவிலான அபராதத்திகை, சிறை தண்டனைகள் , மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிலும் வகையில் இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என வலில்யுறுத்தப்பட்டுள்ளது.

▪️ கடந்த 18 மாதங்களாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரியும் நிலையில், பிரதமர் மோடி அமைதி காப்பது அம்மாநிலத்தை ஒன்றிய அரசு கைவிட்டதாகவே தெரிகிறது. இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

▪️மத்திய வருவாயில் மாநில அரசுக்கு 50 விழுக்காடு நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் திட்டங்களுக்கு 50 விடுக்காடு நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்கிற தமிழ்நாட்டின் கோரிக்கைகள் 16வது நிதிக்குழுவின் அறிக்கையில் முழுமையாக இடம்பெற வேண்டும் என்றும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

▪️ 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பரப்புரையை இன்று முதல் தொடங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

MUST READ