spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு“காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி”- உதயநிதி ஸ்டாலின்

“காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி”- உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

“காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனாளி”- உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

சென்னை திருவல்லிக்கேணி, காயிதேமில்லத் சாலையில் அமைந்துள்ள சென்னை நடுநிலை பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்க நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

we-r-hiring

பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்ட உதயநிதிஸ்டாலின், உணவின் சுவை தரம் குறித்து கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதை தொடர்ந்து பள்ளியின் கட்டமைப்பு தொடர்பாகவும் பள்ளியில் உள்ள வசதிகள் தொடர்பாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த பகுதி பள்ளியில் காலை உணவை உட்கொண்டு உணவு தரமாக உள்ளதா? என்று ஆய்வு செய்வது வழக்கம். இத்திட்டத்தினால் மூலம் 30 முதல் 40 சதவீதம் வரை அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

Image

சென்னை மாநகராட்சி பொறுத்த வரை 358 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு கூடுதலாக 65,030 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளிகளில் வழங்கக்கூடிய உணவின் தரம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். மேலும், பிரக்யாநந்தா வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தாலும், அவர் இந்த அளவிற்கு வந்தது இந்த வயதில் மிக பெரிய சாதனை. சந்திரயான் 3 ஓட்டு மொத்த இந்தியாவிற்கும் பெருமை” எனக் கூறினார்.

MUST READ